தகுதியுடைமை – பி.ஏ., எல்.எல்.பி., (5 ஆண்டு)

தமிழக அரசின் மேல்நிலைத் தேர்வுக்கு இணையாக ஆட்சிமன்ற குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 10+2 முறையின் கீழ் 45% மதிப்பெண்களுக்குக் குறையாமல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கைக்கு தகுதியானவர்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, பி.ஏ. எல்.எல்.பி., 5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களில், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

தகுதியுடைமை – எல்.எல்.பி., (3 ஆண்டு)

10+2+3+ அல்லது 11+1+3 முறைக்குப் பிறகு, பரஸ்பர அங்கீகார நோக்கத்திற்காக புதுதில்லியில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் உறுப்பினர் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மூன்று ஆண்டு பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவர்கள் எல்.எல்.பி., (3 ஆண்டுகள்) சட்டப் படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.