வருகை படிவேடு

75% மற்றும் அதற்கும் அதிக விழுக்காடு வருகைப் பதிவைப் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். கல்லூரி முதல்வரின் சிபாரிசின் பேரில் பிழை பொறுத்தல் (Condonation) 66% முதல் 75% ற்குள் இருக்க வேண்டும். 66% க்கும் குறைவான வருகைப் பதிவைப் பெற்ற மாணவர்கள், நிறுத்தம் செய்யப்பட்டு (REDO), மீண்டும் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, சட்டக் கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திடமிருந்து மறு சேர்க்கைக்கு (Rejoin) முன் அனுமதி பெற்று, அடுத்த கல்வியாண்டில் ஒரு ஆண்டு / ஒரு பருவத்தின் முழுப் படிப்பையும் மீண்டும் தொடங்க வேண்டும்.

வகைப்படுத்துதல்

பல்கலைக்கழகத் தேர்வில் ஒவ்வொரு தாளிலும் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45% ஆகும். வெற்றி பெற்ற மாணவர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றனர்:

  • 60% ற்கு மேல் – முதல் வகுப்பு
  • 50% முதல் 59% வரை – இரண்டாம் வகுப்பு
  • 45% முதல் 49% வரை – மூன்றாம் வகுப்பு

தோல்வியடைந்த பாடங்களில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.